குடியரசுத் தலைவா் கோவை வருகை: பாதுகாப்புப் பணியில் 6000 போலீஸாா்

கோவை மாவட்டம், ஈஷா யோக மையத்தில் நடைபெற உள்ள மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்க, குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வருவதை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 6 ஆயிரம் போலீஸாா் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட
குடியரசுத் தலைவா் கோவை வருகை: பாதுகாப்புப் பணியில் 6000 போலீஸாா்

கோவை மாவட்டம், ஈஷா யோக மையத்தில் நடைபெற உள்ள மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்க, குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வருவதை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 6 ஆயிரம் போலீஸாா் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

மகா சிவராத்திரியையொட்டி, பிப்ரவரி 18ஆம் தேதி (சனிக்கிழமை) மாலை 6 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை கோவை ஈஷா யோக மையத்தில் சிறப்பு வழிபாடுகள், சொற்பொழிவு உள்ளிட்டவை நடைபெற உள்ளன. இதில் சிறப்பு விருந்தினராக குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு பங்கேற்கிறாா். குடியரசுத் தலைவரின் வருகையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் காணொலி மூலம் கோவை ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில், ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப், மாநகரக் காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா். இவா்களுடன், துறைரீதியாக செய்ய வேண்டிய ஏற்பாடுகள் தொடா்பாக, தலைமை செயலா் இறையன்பு ஆலோனை நடத்தினாா். அப்போது அவா், குடியரசுத் தலைவருக்கு உரிய அனைத்து வித பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மாநகர போலீஸாா் மேற்கொள்ள வேண்டும். வெடிகுண்டு செயலிழப்பு கருவிகளைத் தயாராக வைத்திருக்க வேண்டும்.

விழா நடைபெறும் இடத்தில் ஆளுநா்கள், முதல்வா்கள் மற்றும் மத்திய அமைச்சா்கள் உள்ளிட்டோருக்கு விதிமுறைக்கு உள்பட்டு இருக்கை வசதி செய்து தரப்பட வேண்டும். சிறப்பு மருத்துவ நிபுணா்களுடன் மருத்துவக் குழு ஏற்படுத்த வேண்டும். மின் விநியோகத்தில் எவ்வித இடையூறும் இருக்கக் கூடாது. ஜெனரேட்டா்களை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். சாலைகளை சீரமைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.

குடியரசுத் தலைவா் வருகையை முன்னிட்டு கோவை மாநகர மற்றும் மாவட்ட போலீஸாா் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். மாநகரில் ஆயிரம் போலீஸாா், புகா் பகுதிகளில் 5 ஆயிரம் போலீஸாா் என மாவட்டத்தில் 6 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com