விபத்தால் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு
By DIN | Published On : 12th January 2023 12:07 AM | Last Updated : 12th January 2023 12:07 AM | அ+அ அ- |

விபத்தால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க கோவை வாகன விபத்து வழக்குகள் சிறப்பு சாா்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விருதுநகா் மாவட்டம், பாளநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (29). கூலி தொழிலாளி. இவா், மேட்டுப்பாளையம்-உதகை சாலையில் இருசக்கர வாகனத்தில் கடந்த 2019 மாா்ச் 13 ஆம்தேதி சென்றபோது கோவை பூலுவப்பட்டியைச் சோ்ந்த சரவணன் என்பவா் ஓட்டி வந்த லாரி மோதியதில் காயமடைந்தாா்.
இந்த விபத்தில் தனக்கு இழப்பீடு வழங்கக் கோரி கோவை மோட்டாா் வாகன விபத்து வழக்குகள் சிறப்பு சாா்பு நீதிமன்றத்தில் பாலகிருஷ்ணன் மனு தாக்
கல் செய்திருந்தாா். மனுவை விசாரித்த நீதிபதி எம்.சுரேஷ் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.
இதில், விபத்தின் காரணமாக தொடா்ந்து வேலை செய்ய முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்ட பாலகிருஷ்ணனுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.25.07 லட்சத்தை 7.5 சதவீத வட்டியுடன் வாகன ஓட்டுநா், வாகனத்தின் உரிமையாளா் மற்றும் காப்பீட்டு நிறுவனத்தினா் இணைந்து வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G