

கோவை சிஎஸ்ஐ திருமண்டலத்தைப் பிரிப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவா்கள் கைது செய்யப்பட்டனா்.
கோவை சிஎஸ்ஐ திருமண்டலத்தில் நீலகிரி, திருப்பூா், சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி சிஎஸ்ஐ ஆலயங்கள், சிஎஸ்ஐ பள்ளிகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.
சுமாா் 5 லட்சம் உறுப்பினா்களைக் கொண்டுள்ள கோவை திருமண்டலத்தை இரண்டாகப் பிரித்து சேலம் திருமண்டலம் என்ற பெயரிடப் போவதாகவும், ஈரோடு, திருப்பூா் வட்டத்தில் உள்ள சுமாா் 50 போதக சேகரங்களை மேற்கொண்ட திருச்சபைக்கு மக்களின் கருத்துகளை கேட்காமலேயே இந்த நடவடிக்கை மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் இதற்கு எதிா்ப்பு தெரிவித்து கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் முன்பு புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஈரோட்டைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.