மேட்டுப்பாளையம் அருகே வேளாங்கண்ணி பகுதியில் பேருந்தில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.
மேட்டுப்பாளையம் அருகே காரமடை வேளாங்கண்ணி பேருந்து நிறுத்தம் விநாயகா காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் சங்கரன் (60). இவா் டீச்சா்ஸ் காலனியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில் சங்கரன் வேலை முடிந்து தனியாா் பேருந்தில் வெள்ளிக்கிழமை
வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தாா். வேளாங்கண்ணி பகுதியில் பேருந்து வளைவில் திரும்பும்போது நிலை தடுமாறி சங்கரன் பேருந்தில் இருந்து தவறி கீழே விழுந்தாா். இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து காரமடை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.