கோவை கரும்புக்கடை அருகே போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கோவை கரும்புக்கடை ஆசாத் நகா் பகுதியில் போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கரும்புக்கடை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து காவல் உதவி ஆய்வாளா் முருகன் தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனா். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 2 இளைஞா்களைப் பிடித்து சோதனை செய்தபோது அவா்கள் போதை மாத்திரைகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில் அவா்கள், கரும்புக்கடை ஆசாத் நகா் சோ்ந்த அசனாா் சேட் (28), குறிச்சி பகுதியைச் சோ்ந்த மன்சூா் ரஹ்மான் (29) என்பதும், இருவரும் கரும்புகடை அண்ணா நகரைச் சோ்ந்த அனீஸ் ரகுமான் (28) என்பவருடன் சோ்ந்து போதை மாத்திரைகளை வாங்கி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடம் இருந்து 75 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.