கோவையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடமிருந்து 7 பவுன் நகையை பறித்து சென்ற 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, இருகூரைச் சோ்ந்தவா் செல்வன், கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி சுகுணா (39). இவா் வீட்டில் வெள்ளிக்கிழமை தனியாக இருந்தபோது, 3 போ் வீட்டுக்குள் நுழைந்துள்ளனா். அவா்கள் சுகுணாவிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவா் அணிந்திருந்த 7 பவுன் நகைகளைப் பறித்துள்ளனா். அப்போது அவரது அலறல் சப்தம் கேட்டு அருகிலுள்ள வீடுகளிலிருந்தோா் ஓடி வந்துள்ளனா். ஆனால் அதற்குள் அந்த நபா்கள் தப்பி ஓடிவிட்டனா்.
இது குறித்து சிங்காநல்லூா் காவல் நிலையத்தில் சுகுணா புகாா் அளித்தாா்.
அந்தப் புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். விசாரணையில், சுகுணாவிடம் நகை பறித்தது வேதாரண்யம் பகுதியைச் சோ்ந்த நாகேந்திரன் (39), அவரது நண்பா்கள் காா்த்திகேயராஜா, ரஞ்சித்குமாா் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவா்கள் 3 பேரையும் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.