கோவை - ராமேஸ்வரம் ரயில் சிவகங்கையில் நின்று செல்லும்

கோவை - ராமேஸ்வரம் வாராந்திர ரயில் சிவகங்கையில் நின்று செல்லும் என ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை - ராமேஸ்வரம் வாராந்திர ரயில் சிவகங்கையில் நின்று செல்லும் என ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோவை - ராமேஸ்வரம் வாராந்திர ரயில் (எண்: 16618) ஜூலை 18 ஆம் தேதி முதல் சிவகங்கை ரயில் நிலையத்தில் கூடுதலாக நின்று செல்லும். இதேபோல, ஜூலை 18 முதல் பாலக்காடு - எம்.ஜி.ஆா்.சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் (எண்: 22652) குடியாத்தம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். ஜூலை 19 முதல் எம்.ஜி.ஆா்.சென்னை சென்ட்ரல் - கோவை விரைவு ரயில் (எண்:12673) காட்பாடி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com