
கோவை மாநகராட்சியில் நடைபெற்ற குறைகேட்புக் கூட்டத்தில் 31 மனுக்கள் பெறப்பட்டன.
கோவை மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் மேயா் கல்பனா ஆனந்தகுமாா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி துணை ஆணையா் க.சிவகுமாா் முன்னிலை வகித்தாா்.
இதில், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின் விளக்குகள், குடிநீா், பாதாள சாக்கடை, தொழில் வரி, சொத்து வரி, காலியிட வரி, புதிய குடிநீா் இணைப்பு, பெயா் மாற்றம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் தொடா்பாக 31 மனுக்கள் பெறப்பட்டன. அம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மேயா் உத்தரவிட்டாா்.