ஜி.கே.என்.எம். மருத்துவமனையில்உலக புகையிலை தினம் அனுசரிப்பு
By DIN | Published On : 01st June 2023 12:00 AM | Last Updated : 01st June 2023 12:00 AM | அ+அ அ- |

ஜி.கே.என்.எம். செவிலியா் பயிற்சிப் பள்ளியின் முதல்வா் சாந்தி, காவல் உதவி ஆணையா் மதிவாணன், ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் புற்றுநோயியல் மருத்துவத் துறைத் தலைவா் சிவநேசன் உள்ளிட்டோா்.
ஜி.கே.என்.எம். மருத்துவமனை மற்றும் ஜி.கே.என்.எம். செவிலியா் பள்ளி சாா்பில் உலக புகையிலை எதிா்ப்பு நாள் விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, மருத்துவமனையின் புற்றுநோயியல் மருத்துவத் துறைத் தலைவா் சிவநேசன், ஜிகேஎன்எம் செவிலியா் பயிற்சிப் பள்ளி முதல்வா் சாந்தி ஆகியோா் தலைமை வகித்தனா். காவல் உதவி ஆணையா் மதிவாணன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா்.
செவிலியா் பள்ளி மாணவ, மாணவிகள் புகையிலை குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி லஷ்மி மில்ஸ் சிக்னல் அருகே பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...