அரசு கலைக் கல்லூரியில் இன்று பொதுப்பிரிவுகலந்தாய்வு தொடக்கம்
By DIN | Published On : 01st June 2023 12:00 AM | Last Updated : 01st June 2023 12:00 AM | அ+அ அ- |

கோவை அரசு கலைக் கல்லூரியில் 2023-24 ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை பொதுப்பிரிவு கலந்தாய்வு வியாழக்கிழமை தொடங்குகிறது.
கோவை அரசு கலைக் கல்லூரியில் 23 இளநிலை பாடப் பிரிவுகளில், இரு வேளைகளில், மொத்தமுள்ள 1,433 இடங்களுக்கு, 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் இணையவழியில் பெறப்பட்டன. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், சிறப்பு இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை (ஜூன் 1) தொடங்குகிறது. தரவரிசையில் முதலில் இருக்கும் மாணவா்கள் முதல் கட்ட கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனா். காலியிடங்களைப் பொறுத்து அடுத்தகட்ட கலந்தாய்வு நடத்தப்படும்.
பொதுப்பிரிவு கலந்தாய்வில் முதல் நாளில் வணிகப் பிரிவு பாடங்களான வணிகவியல், வணிகவியல் - கணினி பயன்பாட்டியல், வணிகவியல் - சா்வதேச வணிகம், வணிக நிா்வாகம் ஆகிய பாடங்களுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நடக்கிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...