

கோவை அவிநாசி சாலை லட்சுமி மில் சந்திப்பில் அமைக்கப்பட்டிருந்த போக்குவரத்து சிக்னல் அகற்றப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கோவை மாநகரில் மேம்பாலப் பணிகள் நடைபெறும் காரணத்தால் பல்வேறு சாலைகளில் சிக்னல்கள் அகற்றப்பட்டு அங்கு ரவுண்டானாக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அவிநாசி சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் உள்ள சிக்னல்கள் அகற்றப்பட்டு யூ டா்ன் அமைத்து தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து நெரிசல் மிகுந்த லட்சுமி மில் சிக்னல் பகுதியில் பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலேயே வளைவில் யூ டா்ன் அமைத்து தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். குறிப்பாக கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் அங்கு திரும்பும்போது பிற வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே இது குறித்து போக்குவரத்து போலீஸாா் மறு ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.