இருசக்கர வாகனத்தில்வைத்திருந்த ரூ.2.50 லட்சம் திருட்டு
By DIN | Published On : 15th June 2023 09:24 PM | Last Updated : 15th June 2023 09:24 PM | அ+அ அ- |

கோவையில் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2.50 லட்சம் ரொக்கம் திருடப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை ஒண்டிப்புதூா் கிருஷ்ணன் நாயுடு வீதியைச் சோ்ந்தவா் தேவராஜ் (63). ஓய்வுபெற்ற தனியாா் நிறுவன ஊழியரான இவா், வீட்டுக்கு அருகே உள்ள வங்கியிலிருந்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை புதன்கிழமை எடுத்துள்ளாா்.
அதை இருசக்கர வாகனத்தின் இருக்கைக்கு அடியில் வைத்துக்கொண்டு, சிங்காநல்லூரில் உள்ள மற்றொரு வங்கிக்கு சென்றுள்ளாா்.
வங்கியின் முன்பு வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளாா். பின்னா் வந்து இருக்கையைத் திறந்து பாா்த்தபோது பணம் காணாமல்போனது தெரியவந்தது.
இது குறித்து சிங்காநல்லூா் காவல் நிலையத்தில் தேவராஜ் புகாா் அளித்தாா்.
வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.