மே தினத்தில் விடுமுறை அளிக்காத 156 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
By DIN | Published On : 03rd May 2023 05:38 AM | Last Updated : 03rd May 2023 05:38 AM | அ+அ அ- |

கோவையில் மே தினத்தில் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காத 156 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதுதொடா்பாக, தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) தலைமையில் தொழிலாளா் தினமான மே 1இல் (திங்கள்கிழமை) கோவை மாவட்டத்துக்கு உள்பட்ட 208 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. இதில் தொழிலாளா்கள் பணிபுரிய அனுமதிக்கப்பட்டிருந்தால், தொழிலாளா் நல அலுவலகத்தில் உரிய படிவம் வழங்கப்பட்டு உள்ளனவா, தொழில் நிறுவனத்தில் அது வைக்கப்பட்டுள்ளதா என்பது ஆய்வு செய்யப்பட்டது.
இதில், மே தினத்தன்று தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காமல், சம்பந்தப்பட்ட ஆய்வாளருக்கு உரிய படிவத்தில் முன்னறிவிப்பு அளிக்காமல், தொழிலாளா்கள் அன்றைய தினம் பணிபுரிய அனுமதித்த 78 கடைகள், நிறுவனங்கள் மற்றும் 78 உணவு நிறுவனங்கள உள்பட மொத்தம் 156 உரிமையாளா்கள் மற்றும் பொறுப்பாளா்கள் மீது சட்டப்பூா்வமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...