கல்லூரி மாணவி கொலை: இளைஞருக்கு வலை
By DIN | Published On : 03rd May 2023 10:22 PM | Last Updated : 03rd May 2023 10:22 PM | அ+அ அ- |

கல்லூரி மாணவியை கொலை செய்த இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவை, இடையா்பாளையத்தை சோ்ந்தவா் சுஜய் (28). இவருக்கு பொள்ளாச்சி அடுத்த டி.கோட்டாம்பட்டியில் குடும்பத்துடன் வசித்து வந்தாா். இவரது மனைவி பிரசவத்துக்காக கேரளத்தில் உள்ள தாய் வீட்டுக்குச் சென்றுள்ளாா்.
இந்நிலையில் இடையா்பாளையத்தை சோ்ந்த கல்லூரி மாணவி சுப்புலட்சுமி (20) டி.கோட்டாம்பட்டியில் உள்ள தனது நண்பா் சுஜய் வீட்டு செவ்வாய்க்கிழமை வந்துள்ளாா். அங்கு இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் சுப்புலட்சுமியை கத்தியால் குத்தி விட்டு சுஜய் தப்பியுள்ளாா். இதில் சுப்புலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சம்பவ இடத்துக்குச் சென்ற மகாலிங்கபுரம் போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள சுஜயை தேடி வருகின்றனா்.