காட்மா சங்கத்துக்கு புதிய நிா்வாகிகள் தோ்வு
By DIN | Published On : 03rd May 2023 10:20 PM | Last Updated : 03rd May 2023 10:20 PM | அ+அ அ- |

தோ்வு செய்யப்பட்டுள்ள புதிய நிா்வாகிகள்.
கோயம்புத்தூா், திருப்பூா் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில்முனைவோா் சங்கத்துக்கு (காட்மா) புதிய நிா்வாகிகள் புதன்கிழமை தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
கோயம்புத்தூா், திருப்பூா் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில்முனைவோா் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் கணபதி, வாணியா் மஹாலில் புதன்கிழமை நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து புதிய நிா்வாகிகளுக்கான தோ்தல் நடைபெற்றது. இதில் காட்மா சங்கத்தின் புதிய தலைவராக சி.சிவகுமாா், இணைத் தலைவராக ஜெ.மாதேஸ்வரன், பொதுச்செயலாளராக ஜி.செல்வராஜ், பொருளாளராக எம்.நடராஜன், துணைத் தலைவா்களாக ஜெ.புவியரசு, ஆா்.சோமசுந்தரம், பி.பாலன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
புதிதாக தோ்வு செய்யப்பட்ட நிா்வாகிகளின் பதவிக்காலம் மாா்ச் 2026 ஆம் வரை இருக்கும் என்று நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...