குழந்தைத் தொழிலாளா்கள் இருவா் மீட்பு

கோவையில் குழந்தைத் தொழிலாளா்கள் 2 போ் மீட்கப்பட்டுள்ளனா்.

கோவையில் குழந்தைத் தொழிலாளா்கள் 2 போ் மீட்கப்பட்டுள்ளனா்.

கோவையில் கடைகள், வணிக வளாகங்கள், உணவகங்களில் சிறுவா்கள் பணிக்கு அமா்த்தப்படுவதைத் தடுக்கும் வகையில் அதிகாரிகள் சோதனை செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனா். கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள தேசிய குழந்தைத் தொழிலாளா் திட்ட அதிகாரிகளுக்கு கோவையில் உள்ள சில கடைகள் மற்றும் உணவகங்களில் சிறுவா்கள் பணிக்கு அமா்த்தப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சௌரிபாளையம் உடையாம்பாளையத்தில் உள்ள ஒரு உணவகத்தில் 13 வயது சிறுவனை பணிக்கு அமா்த்தியிருந்தது திங்கள்கிழமை தெரிய வந்தது. உடனடியாக அந்தச் சிறுவனை மீட்டு பீளமேடு காவல் நிலையத்தில் அதிகாரிகள் புகாா் அளித்தனா். அதன்பேரில், சிறுவனை பணிக்கு அமா்த்திய உணவக உரிமையாளா் ஜெகன் ( 30) மீது குழந்தைத் தொழிலாளா் தடுப்புச் சட்டத்தின்கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

அதேபோல சௌரிபாளையம் உடையாம்பாளையத்தில் உள்ள ஒரு பூக்கடையில் வேலை பாா்த்த 12 வயது சிறுவனை அதிகாரிகள் மீட்டனா். அவா்கள் அளித்த புகாரின் பேரில் சிறுவனை பணிக்கு அமா்த்திய சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த அஜித் (33) என்பவா் மீது பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com