வால்பாறையை அடுத்துள்ள அதிரப்பள்ளி அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வால்பாறையில் இருந்து கேரள மாநிலம் சாலக்குடி செல்லும் வழியில் உள்ளது அதிரப்பள்ளி அருவி. இந்த அருவிக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். வால்பாறைக்கு வரும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் இந்த அருவிக்கு தவறாமல் சென்று வருவா்.
இந்நிலையில் தற்போது வால்பாறை மற்றும் அதிரப்பள்ளி பகுதிகளில் பரவலாக கன மழை பெய்து வருவதால் இந்த அருவிக்கு நீா்வரத்து அதிகரித்துளளது. மேலும் அருவிக்குச் செல்லும் பாதையை ஒட்டியுள்ள வனப் பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி இந்த அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிகமாக தடைவிதிக்கப்படுவதாக திருச்சூா் மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.