குறைந்தபட்ச ஆதரவு விலையில் பருத்தி கொள்முதல்: இந்திய பருத்திக் கழகம் அறிவிப்பு
By DIN | Published On : 12th May 2023 10:58 PM | Last Updated : 12th May 2023 10:58 PM | அ+அ அ- |

குறைந்தபட்ச ஆதரவு விலையில் பருத்தி கொள்முதல் செய்யப்படுவதாக, இந்திய பருத்திக் கழகம் அறிவித்துள்ளது.
இது தொடா்பாக இந்திய பருத்திக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்திய பருத்திக் கழகமானது, நடப்பு பருத்தி பருவமான 2022-23இல் பருத்தி விவசாயிகளைப் பாதுகாக்கவும், அதிகப்படியான விவசாயிகளை சென்றடைவதற்கும், பருத்தி விளையும் அனைத்து மாநிலங்களிலும் 400க்கும் மேற்பட்ட பருத்தி கொள்முதல் நிலையங்களைத் திறந்துள்ளது. தற்போது, பருத்தி விலையானது குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட அதிகமாக நிலவுகிறது . மேலும், விவசாயிகள் பருத்தியை அவசரகதியில் குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட குறைவான விலையில் விற்க வேண்டிய தேவையில்லை. ஜூன் முதல் வாரத்தில் பருவமழை தொடங்குவதால், மழையினால் பருத்தி சேதம் அடையாமல் பாதுகாக்க, இந்த பருத்தி பருவம் 2022-23க்கான இத்தகைய குறைந்தபட்ச ஆதரவு விலை கொள்முதலானது 2023 ஆம் ஆண்டு மே 20 ஆம் தேதி வரையே நிலவும்.
இதன் மூலம் பருவமழை தொடங்குவதற்கு முன்பே பருத்தியை பதப்படுத்தும் பணி நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.