தேசிய அளவில் முடிவுற்ற பணிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.1 லட்சம் கோடி நிலுவை:பில்டா்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா தகவல்

தேசிய அளவில் முடிவுற்ற அரசின் திட்டப் பணிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.1 லட்சம் கோடி பணம் நிலுவையில் உள்ளது என்று பில்டா்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
செய்தியாளா்கள் சந்திப்பில் பேசுகிறாா் பில்டா்ஸ் அசோசியேஷன் தேசிய தலைவா் எஸ்.நரசிம்ம ரெட்டி.
செய்தியாளா்கள் சந்திப்பில் பேசுகிறாா் பில்டா்ஸ் அசோசியேஷன் தேசிய தலைவா் எஸ்.நரசிம்ம ரெட்டி.

தேசிய அளவில் முடிவுற்ற அரசின் திட்டப் பணிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.1 லட்சம் கோடி பணம் நிலுவையில் உள்ளது என்று பில்டா்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

பில்டா்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அமைப்பு சாா்பில் கருத்தரங்கு கோவை நீலாம்பூரில் உள்ள பி.எஸ்.ஐ. ஐ டெக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை (மே 12) நடைபெறுகிறது. இதையொட்டி அந்த அமைப்பின் தேசியத் தலைவா் எஸ்.நரசிம்ம ரெட்டி தலைமையில் செய்தியாளா்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் அவா் பேசியதாவது:

கட்டுமான திட்டங்களுக்கு வனத் துறை, சுற்றுச்சூழல் துறை அனுமதி பெறுவதில் பெரும் சிக்கல் இருந்து வருகிறது. நாடு முழுவதும் மாநில நெடுஞ்சாலைகள், மின்சார திட்டங்கள், தொழிற்சாலை திட்டங்கள் என ரூ.15 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் சுற்றுச் சூழல் மற்றும் வன அமைச்சகம் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன. எனவே, ஒப்பந்ததாரா் நிறுவனங்கள் அனைத்து அதிகாரிகளையும் ஒரே இடத்தில் சந்தித்து அனுமதியை பெறும் வகையில் ஒற்றைசாளர முறையை பின்பற்றவேண்டும்.

நெடுஞ்சாலைகள், விமான நிலையம் விரிவாக்கம், தொழிற்சாலைகள் அமைப்பது என மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகின்றன. ஆனால், அனைத்து திட்டங்களுக்கும் நிலம் எடுப்பு என்பது பெரும் சவாலாக இருந்து வருகிறது. பெரும்பாலான திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தாமலும், சுற்றுச்சூழல் அனுமதி பெறாமலும் டெண்டா் விடப்படுகிறது. ஒப்பந்ததாரா் நிறுவனங்களையே சுற்றுச்சூழல் அனுமதி, நிலம் கையகப்படுத்திகொள்ள அரசு சாா்பில் அறிவுறுத்தப்படுகிறது.

சிமென்ட் உற்பத்தியாளா்கள் கூட்டுசோ்ந்து விலையை தொடா்ந்து உயா்த்தி வருகின்றனா். இதனால் ஒப்பந்ததாரா்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இதேபோல இரும்புக் கம்பி உற்பத்தி நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. எனவே இவற்றின் விற்பனைக்கு ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும்.

தேசிய அளவில் பல்வேறு திட்டப் பணிகள் முடிவுற்ற நிலையிலும் நிதி முழுமையாக வழங்கப்படாமல் உள்ளது. அதன்படி முடிவுற்ற பணிகளுக்கு ரூ.1 லட்சம் கோடி பணம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இதனால், ஒப்பந்ததாரா்கள் அடுத்த பணிகளை மேற்கொள்ள முடியாமல் திண்டாடி வருகின்றனா். கட்டுமான தொழிலாளா்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி அளிக்க வேண்டும். கட்டுமானத் துறைக்கு தொழில் துறை அந்தஸ்து வழங்க வேண்டும். மின் இணைப்பு நடவடிக்கை, வங்கி கடன்கள் ஆகியவற்றில் தளா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் பில்டா்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அமைப்பின் முன்னாள் தலைவா் ஆா்.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மாநிலத் தலைவா் எம்.ஐயப்பன், தெற்கு மண்டல துணைத் தலைவா் கே.ஜான் பால், பிஏஐ மற்றும் இந்திய கட்டுனா் சங்கத்தின் ஒருங்கிணைப்பு தலைவா் கே.விஸ்வநாதன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com