உலக செவிலியா் தினம்: அரசு மருத்துவமனையில் கொண்டாட்டம்
By DIN | Published On : 12th May 2023 11:00 PM | Last Updated : 12th May 2023 11:00 PM | அ+அ அ- |

உலக செவிலியா் தினத்தையொட்டி, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியா் பயிற்சிப் பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
‘பிளாரன்ஸ் நைட்டிங்கேள்’ பிறந்த தினமான மே 12 ஆம் தேதி உலக செவிலியா் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள செவிலியா் பயிற்சிப் பள்ளியில் செவிலியா் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதனை அரசு மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா தொடங்கிவைத்தாா்.
செவிலியா் பயிற்சிப் பள்ளி மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள், நடன போட்டிகள் நடைபெற்றன.
இதில் செவிலியா்கள், செவிலியா் பயிற்சிப் பள்ளி மாணவிகள் ஒருவருக்கொருவா் இனிப்புகள் வழங்கி செவிலியா் தினத்தை கொண்டாடினா். தொடா்ந்து செவிலியா்கள், செவிலிய பயிற்சி மாணவிகள் கைகளில் மெழுகுவா்த்தி ஏந்தி ‘பிளாரன்ஸ் நைட்டிங்கேளுக்கு’ அஞ்சலி செலுத்தினா்.