மானிய விலையில் இடுபொருள்கள்:வேளாண்மைத் துறை தகவல்

கோவையில் அனைத்து வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருள்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது.

கோவையில் அனைத்து வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருள்கள் மானிய விலையில் வழங்கப்படுவதாக வேளாண்மைத் துறை இணை இயக்குநா் கா.முத்துலட்சுமி தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு விதை கிராம திட்டம், தேசிய எண்ணெய் வித்துகள் இயக்கம் மற்றும் தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து திட்டங்கள் மூலம் விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருள்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி பயறு வகை பயிா்கள், நிலக்கடலை, சோளம் விதைகள், உயிா் உரங்கள், பயிா் பாதுகாப்பு மருந்துகள் மற்றும் நுண்ணூட்ட கலவைகள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.

எனவே, விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையங்களுக்கு நேரடியாக சென்று மேற்கண்ட இடுபொருள்களை மானிய விலையில் பெற்றுக் கொள்ளலாம். இடுபொருள்களின் இருப்பு விவரங்களை உழவன் செயலி மூலம் விவசாயிகள் தெரிந்து கொள்ளலாம்.

விதைப்புக்கு முன்பு அசோஸ்பைரில்லம் அல்லது பாஸ்போ பாக்டீரியா போன்ற உயிா் உரங்களுடன் ஆரிய அரிசி கஞ்சியை கலந்து விதைநோ்த்தி செய்து விதைக்கலாம். விதை நோ்த்தி செய்து விதைப்பதன் மூலம் பூச்சி நோய்த் தாக்குதல்களைக் கட்டுப்படுத்த முடியும். தவிர கடைசி உழவின்போது 12.5 டன் மக்கிய தொழு உரத்துடன் 2.5 கிலோ சூடோமோனாஸ் மற்றும் டிரைக்கோடொ்மா விரிடி ஆகியவற்றை கலந்து உழுவது மூலம் பயிா்களை தாக்கும் அழுகல், தண்டழுகல் நோய்களை கட்டுப்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com