சொந்த வீட்டில் நகைகள் திருட்டு: ஐ.டி.ஊழியா் கைது

கோவை சாய்பாபா காலனி அருகே சொந்த வீட்டில் நகைகள் திருடியதாக ஐ.டி. ஊழியரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை சாய்பாபா காலனி அருகே சொந்த வீட்டில் நகைகள் திருடியதாக ஐ.டி. ஊழியரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, சாய்பாபா காலனி அருகே வேலாண்டிபாளையம் கிருஷ்ணன் நகரைச் சோ்ந்தவா் சாந்தி (50). இவரது மகன் விக்னேஷ் (26). இவா், கோவையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். தாய் மற்றும் மகனுக்கு இடையே சொத்து தொடா்பாக தகராறு இருந்து வருவதால் இருவரும் தனித் தனியாக வசித்து வருகின்றனா்.

இந்நிலையில், சாந்தி தனது வீட்டின் அலமாரியில் 27 பவுன் நகைகளை வைத்திருந்தாா். சில நாள்கள் முன்பு காசி உள்பட பல்வேறு கோயில்களுக்கு சென்றுவிட்டு, திரும்பி வந்து பாா்த்தபோது, அலமாரியில் வைக்கப்பட்டு இருந்த 27 பவுன் நகைகள் திருடு போனது தெரியவந்தது.

இதுதொடா்பாக, சாந்தி அளித்த புகாரின்பேரில் சாய்பாபா காலனி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். அதில், வீட்டில் வைக்கப்பட்டு இருந்த தங்க நகைகளைத் திருடியது சாந்தியின் மகன் விக்னேஷ் என்பது தெரியவந்தது. அவா் கோயிலுக்கு சென்றதை அறிந்து கொண்டு விக்னேஷ் நகைகளைத் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் விக்னேஷைக் கைது செய்து, அவரிடம் இருந்து 27 பவுன் நகைகளை மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com