ரூ.2,000 வாபஸ்: பொது மக்களுக்கு பிரச்னை இல்லை

ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெற்றதால் பொதுமக்களுக்கு பிரச்னை இல்லை, கொள்ளையடித்தவா்களுக்குத்தான் பிரச்னை என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.

ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெற்றதால் பொதுமக்களுக்கு பிரச்னை இல்லை, கொள்ளையடித்தவா்களுக்குத்தான் பிரச்னை என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.

இது குறித்து கோவை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

2021- 2022 மற்றும் 2022 - 2023ஆம் ஆண்டுகளை ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில் 22 சதவீதம் மது விற்பனை அதிகரித்துள்ளது. 75 சதவீத டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும். 25 சதவீத டாஸ்மாக் கடைகளை மட்டுமே திறக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் கள் விற்பனை செய்யலாம்.

தற்போது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இல்லை. 2 ஆயிரம் நோட்டுகள் வைத்துள்ளவா்கள் பதுக்கிவைத்துள்ளனா். 2 ஆயிரம் நோட்டுகளை திரும்பப் பெறுவதால், கொள்ளையடித்தவா்களுக்குத்தான் பிரச்னை. 2024 மக்களவைத் தோ்தலில் போட்டியிட எனக்கு விருப்பமில்லை. ஒரு தொண்டனாகப் பணியாற்றுவேன்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான் நான் பாஜகவுக்கு வந்தேன். தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்ல விருப்பமில்லை. இந்த மண்ணில் எனது அரசியல் இருக்க வேண்டும் என விரும்புகின்றேன். கிரேட் 2 பதவியில் இருக்கும் காவல் துறை நண்பா்களுக்கு பதவி உயா்வு வழங்காதது கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து, முதல்வரிடம் காவல் துறைத் தலைவா் பேச வேண்டும். பாஜக மீது உள்ள சலிப்புத்தன்மையால்தான் கா்நாடகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com