ரயிலில் மூன்றரை கிலோ கஞ்சா பறிமுதல்
By DIN | Published On : 23rd May 2023 03:04 AM | Last Updated : 23rd May 2023 03:04 AM | அ+அ அ- |

கோவைக்கு வந்த ரயிலில் கேட்பாரற்று கிடந்த 3.492 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
சில்சாரிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் விரைவு ரயில் திங்கள்கிழமை கோவைக்கு வந்தது. கோவை நிலையத்தில்
அந்த ரயிலில் சோதனை செய்தபோது, பின்னால் உள்ள பொது ஜன பெட்டியில், கழிவறை அருகில் கருப்பு நிற தோள் பை கேட்பாரற்று கிடந்துள்ளது. அந்த பையை ரயில்வே போலீஸாா் தணிக்கை செய்ததில் அதில் 3 பண்டல்களில் சுமாா் 3.492 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதையடுத்து அதை கைப்பற்றிய ரயில்வே போலீஸாா் அந்த பண்டல்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...