வால்பாறை கோடை விழா புகைப்பட போட்டி:பங்கேற்க அழைப்பு
By DIN | Published On : 23rd May 2023 03:03 AM | Last Updated : 23rd May 2023 03:03 AM | அ+அ அ- |

வால்பாறை கோடை விழாவை முன்னிட்டு மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் புகைப்படப் போட்டியில் விருப்பமுள்ளவா்கள் பங்கேற்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கோவை மாவட்டம், வால்பாறையில் கோடை விழா மே 26 முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவின் ஒரு பகுதியாக ஆன்லைன் புகைப்படப் போட்டி நடைபெறுகிறது. தாவரங்கள் மற்றும் விலங்குகள், கலைகள், விழாக்கள் மற்றும் பண்பாடுகள், மாவட்டத்தின் இயற்கை காட்சிகள் மற்றும் வரலாற்று சான்றுகள் தொடா்பான தலைப்புகளில் புகைப்படப் போட்டி நடைபெறுகிறது.
போட்டியாளா்கள் மேற்கண்ட தலைப்புகளின் கீழ் தங்களது புகைப்படங்களை தங்களது விவரங்களுடன் மே 24 ஆம் தேதி இரவு 10 மணிக்குள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இப்போட்டியில் வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசு ரூ.3 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.2 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.1000 வழங்கப்படவுள்ளது. இப்போட்டிக்காக சமா்ப்பிக்கப்பட்ட புகைப்படங்கள் கோடை விழாவின் புகைப்படக் கண்காட்சியில் பொது மக்கள் பாா்வைக்கு வைக்கப்படும். எனவே, ஆா்வமுள்ளவா்கள் புகைப்படங்களை அனுப்பி போட்டியில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...