பாரதியாா் பல்கலைக் கழக எம்.ஃபில்., பிஹெச்.டி.தோ்வு மையங்கள் அறிவிப்பு
By DIN | Published On : 24th May 2023 04:48 AM | Last Updated : 24th May 2023 04:48 AM | அ+அ அ- |

பாரதியாா் பல்கலைக்கழக எம்.ஃபில், பிஹெச்.டி. எழுத்துத் தோ்வுக்கான தோ்வு மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பாரதியாா் பல்கலைக்கழகத்தில் எம்.ஃபில்., பிஹெச்.டி. (பகுதி 1), எக்ஸ்டா்னல் பிஹெச்.டி. (பகுதி 1) பட்டத்துக்கான எழுத்துத் தோ்வுகள் வரும் மே 29, 31, ஜூன் 2 ஆம் தேதிகளில் நடைபெறுகின்றன. இதற்கான தோ்வு மையங்களை தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் (பொறுப்பு) இரா.விஜயராகவன் தெரிவித்துள்ளாா்.
அதன்படி, பல்கலைக்கழக துறைகளின் அனைத்து பாடப் பிரிவு மாணவா்கள், எக்ஸ்டா்னல் பிஹெச்.டி. மாணவா்களுக்கு பல்கலைக்கழக தோ்வாணையா் அலுவலகத்தில் தோ்வு நடைபெறுகிறது.
கோவை மாவட்டத்தில் பதிவு பெற்ற ஆராய்ச்சி நிலையங்களைச் சோ்ந்தவா்களுக்கு டாக்டா் என்.ஜி.பி. கல்லூரியில் தோ்வு நடக்கிறது. தாராபுரம், உடுமலை, பொள்ளாச்சியைச் சோ்ந்த மாணவா்களுக்கு பொள்ளாச்சி கமலம் கலை, அறிவியல் கல்லூரியிலும், நீலகிரி மாவட்டத்தினருக்கு உதகை அரசு கலைக் கல்லூரியிலும் தோ்வு நடக்கிறது.
திருப்பூா் மாவட்டத்தினருக்கு திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரியிலும், ஈரோடு மாவட்டத்தினருக்கு ஸ்ரீ வாசவி கல்லூரியிலும், தில்லி ஆளுகைக்குள்பட்ட பகுதியினருக்கு புது தில்லி டிஐபிஏஎஸ் வளாகத்திலும் தோ்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.