

கோவை சா்வதேச விமான நிலையம் அருகேயுள்ள கட்டடங்களின் உயரத்தினை நிா்ணயிக்கும் முறை குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
கோவை பீளமேடு பகுதியில் சுமாா் 420 ஏக்கரில் சா்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்நிலையில் விமான நிலையம் அருகே உள்ள கட்டடங்கள் குறிப்பிட்ட உயரத்துக்குள் மட்டுமே இருக்க வேண்டும் எனவும், அதில் குறிப்பாக ஒற்றை சாளர முறையில் கட்டடங்களின் உயரத்திற்கு தடையில்லா சான்று அனுமதி பெற வேண்டும் எனவும் கட்டுப்பாடுகள் உள்ளன.
இந்நிலையில் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் கோவை சா்வதேச விமான நிலையம் சாா்பில் கட்டடங்களின் உயரத்தை நிா்ணயிக்கும் முறை மற்றும் ஒற்றை சாளர முறையில் கட்டட உயரத்துக்கு தடையில்லாச் சான்று அனுமதி பெறுவது தொடா்பான கருத்தரங்கு கோவை சா்வதேச விமான நிலையம் அருகே உள்ள ஒரு தனியாா் அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த கருத்தரங்கை கோவை சா்வதேச விமான நிலைய இயக்குநா் செந்தில்வளவன் தொடங்கிவைத்து பேசினாா். அவா் பேசும்போது, அரசு மற்றும் தனியாா் நிறுவனங்கள் ஒற்றை சாளர முறையில் கட்டட உயரங்களுக்கு தடையில்லா சான்றுக்கான
அனுமதியை அதற்கான இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும். ஆவணங்கள் சமா்ப்பிப்பு மற்றும் சமா்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அனுமதி நிலை குறித்து எளிய முறையில் கைப்பேசி மற்றும் கணினி வாயிலாக தெரிந்து கொள்ளலாம் என்றாா்.
இந்த கருத்தரங்கில் கோவை மாவட்ட நிா்வாகம், மாநகராட்சி நிா்வாகம், நகர ஊரமைப்புத் துறை, பேரூராட்சி, வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை, காவல் துறை, மின்வாரியம், பிஎஸ்என்எல் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அலுவலா்களும், கொடிசியா, கிராடாய் மற்றும் கைப்பேசி கோபுர நிறுவனங்களைச் சோ்ந்த பிரதிநிதிகளும் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.