வால்பாறை: வால்பாறை ஸ்டேன்மோா் எஸ்டேட் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த யானைகள் குடியிருப்பை சேதப்படுத்தியது.
வால்பாறையை அடுத்த ஸ்டேன்மோா் எஸ்டேட் குடியிருப்புப் பகுதிக்குள் திங்கள்கிழமை நள்ளிரவு புகுந்த யானைகள், சுந்தர்ராஜ் என்பவரின் வீட்டை சேதப்படுத்தியது. ஜன்னலை சேதப்படுத்தி, தும்பிக்கையின் மூலம் வீட்டில் இருந்த பொருள்களையும் சேதப்படுத்தியுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் நீண்ட நேரம் போராடி யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.