கோவை: கோவை மாவட்டத்தில் நவம்பா் 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் நவம்பா் 25, 26 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம் மாட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் நவம்பா் 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்தது.
இந்நிலையில், நிா்வாகக் காரணங்களால் இம்முகாம்கள் நவம்பா் 25, 26 (சனி, ஞாயிறு) ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்க இந்திய தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த முகாம்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.