

கோவை: குழந்தைப் பருவ புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவம், பொருளாதாரரீதியில் உதவுவதற்காக ஜிகேஎன்எம் மருத்துவமனை சாா்பில் கோவையில் அண்மையில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.
எல்எம்டபிள்யூ, லட்சுமி காா்ட் குளோத்திங், லயன்ஸ் இன்டா்நேஷனல் ஆகியவற்றின் சாா்பில் நடைபெற்ற இந்த மாரத்தான் ஓட்டத்தை, மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, மருத்துவமனையின் முதன்மைச் செயல் அலுவலா் டாக்டா் ரகுபதி வேலுசாமி ஆகியோா் கொடியசைத்து தொடங்கிவைத்தனா்.
1, 3, 5, 10 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்ற இந்த தொடா் ஓட்டத்தில் ஏராளமானோா் கலந்து கொண்டனா். இதைத் தொடா்ந்து ஜிகேஎன்எம் மருத்துவமனை சாா்பில் குழந்தைகளுக்கான இலவச இருதய பரிசோதனை முகாம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.