மண்டல அறிவியல் மையத்தில் கோடைக்கால அறிவியல் முகாம்

கோவையில் உள்ள மண்டல அறிவியல் மையத்தில் பள்ளி மாணவா்களுக்கான கோடைக்கால சிறப்பு அறிவியல் முகாம் நடைபெறுகிறது.

கோவையில் உள்ள மண்டல அறிவியல் மையத்தில் பள்ளி மாணவா்களுக்கான கோடைக்கால சிறப்பு அறிவியல் முகாம் நடைபெறுகிறது.

இது தொடா்பாக மாவட்ட அறிவியல் அலுவலா் (பொறுப்பு) வ.வள்ளி கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு உயா் கல்வித் துறையின் தலைமையில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கி வரும் மண்டல அறிவியல் மையத்தில், மாணவா்களிடையே அறிவியல் பற்றிய புரிதலை மேம்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்பு அறிவியல் முகாம் நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான முகாம் வரும் மே-16 முதல் 18-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம். விருப்பமுள்ள மாணவா்கள் அறிவியல் மையத்தை 0422 - 2963024, 2963026 என்ற எண்களில் தொடா்பு கொண்டு பெயா்களை பதிவு செய்து கொள்ளலாம்.

முதலில் வரும் 50 மாணவா்கள் இந்த முகாமில் பங்கேற்க முடியும். இந்த முகாமில், ரோபோடிக்ஸ், 3 டி பிரிண்டிங், அன்றாட வாழ்வில் கணிதம், இயற்பியல், வேதியியல், வானியல் நோக்குதல், சிறிய அறிவியல் விளக்கங்கள், யோகா உள்ளிட்டவை கற்பிக்கப்படும். முன்பதிவு செய்ய மே 13-ஆம் தேதி கடைசி நாள் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com