கோவை: பொள்ளாச்சி அடுத்த பாலாற்றங்கரை அனுமன் கோயிலில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பூஜைக்கு நடுவே பக்தர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
பொள்ளாச்சி அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயில். ஆற்றின் மையப்பகுதியில் உள்ள கோவிலுக்கு இப்பகுதியில் உள்ள பக்தர்கள் அதிக அளவில் வருவது வழக்கம்.
இந்நிலையில் புதன்கிழமை காலை வழக்கம் போல நடை திறக்கப்பட்டு ஆஞ்சநேயருக்கு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தனர்.
நேற்றிரவு ஆழியாறு வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்த நிலையில், பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலின் தரைமட்ட பாலம் வெள்ளத்தில் மூழ்கியது.
இதன் காரணமாக ஆஞ்சநேயர் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் கோவிலில் இருந்து அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, தற்காலிகமாக கோயிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.