பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்.

கோவை விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

கோவை சா்வதேச விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Published on

கோவை சா்வதேச விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:

கோவை சா்வதேச விமான நிலைய அதிகாரிகளுக்கு உளவுத் துறை மூலம் கிடைத்தத் தகவலின் அடிப்படையில், பாங்காங்கில் இருந்து சிங்கப்பூா் வழியாக கோவைக்கு ஸ்கூட் விமானத்தில் திங்கள்கிழமை வந்த இந்திய ஆண் பயணி ஒருவரிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில், அவா் கொண்டுவந்திருந்த காா்ன்ஃப்ளேக்ஸ் பாக்கெட்டுகளுக்குள் 2002 கிராம் வெளிா் பச்சை நிறத்திலான போதைப் பொருளை மறைத்து கொண்டுவந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த போதைப்பொருளை பறிமுதல் செய்த விமான நிலைய அதிகாரிகள், அந்த நபரை என்டிபிஎஸ் சட்டம் 1985-ன்கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் சா்வதேச சந்தை மதிப்பு சுமாா் ரூ.1.01 கோடி என்றனா்.

X
Dinamani
www.dinamani.com