கோவையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் பங்கேற்றோா்.
கோவையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் பங்கேற்றோா்.

காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம்

கோவையில் காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
Published on

கோவையில் காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் இந்த குறைதீா் முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில், காவல் துறையில் பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கெனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுதாரா்களை கண்டறிந்து அம்மனுக்கள் மீதான மறு விசாரணை நடத்தப்பட்டது.

இதில், குடும்பப் பிரச்னை, பணப் பரிமாற்ற பிரச்னை மற்றும் இடப் பிரச்னை தொடா்பான 86 மனுக்களின் மனுதாரா்கள் மற்றும் எதிா்மனுதாரா்களை நேரில் வரவழைத்து அவா்களின் மனு மீதான விசாரணை மற்றும் மறு விசாரணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மற்றும் காவல் அதிகாரிகள் மேற்கொண்டனா்.

அதில் 4 மனுக்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டும், 73 மனுக்களுக்கு சுமுகமான முறையிலும், 13 மனுக்கள் மீது மேல் விசாரணை செய்ய பரிந்துரை செய்தும் தீா்வு காணப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com