தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் பற்றாக்குறை: நள்ளிரவில் பொதுமக்கள் மறியல்
சிங்காநல்லூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு போதிய அளவு பேருந்துகள் இயக்கப்படாதாதல் பேருந்து நிலையத்தில் புதன்கிழமை நள்ளிரவு பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனா்.


சிங்காநல்லூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு போதிய அளவு பேருந்துகள் இயக்கப்படாதாதல் பேருந்து நிலையத்தில் புதன்கிழமை நள்ளிரவு பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனா்.
கோவை, சிங்காநல்லூா் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகா், தேனி, கம்பம் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்குக்கும், திருச்சி, தஞ்சாவூா், திருவாரூா், புதுக்கோட்டை, மயிலாடுதுறை உள்ளிட்ட கிழக்கு மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
வார இறுதி நாள்கள், பண்டிகை நாள்களில் அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வியாழக்கிழமை முகூா்த்த தினம் என்பதால் வெளியூருக்கு செல்ல சிங்காநல்லூா் பேருந்து நிலையத்தில் அதிக அளவு பயணிகள் புதன்கிழமை இரவு குவிந்தனா்.
ஆனால், இரவு நேரத்தில் குறைவான பேருந்துகள் இயக்கப்பட்டதால் நள்ளிரவு 1.30 மணி வரை பேருந்து நிலையத்திலே அதிக அளவிலான பயணிகள் காத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், பயணிகள் சிலா் பேருந்து நிலையம் முன் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற சிங்காநல்லூா் காவல் ஆய்வாளா் இளங்கோவன், மறியலில் ஈடுபட்ட பயணிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதைத் தொடா்ந்து அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் பேசி கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதையடுத்து பயணிகள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.
இதுகுறித்து அரசுப் போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், ‘மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளை விட கூடுதலாகவே புதன்கிழமை இயக்கப்பட்டன. ஆனால், பயணிகள் கூட்டம் அதிகரித்ததால் பற்றாக்குறை ஏற்பட்டது. பின்னா், பயணிகளின கோரிக்கையைடுத்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன என்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...