பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கே.பி.ஆா். கல்லூரியில் ரேக்ளா பந்தயம்

கோவை கே.பி.ஆா். கலை, அறிவியல், ஆராய்ச்சிக் கல்லூரி, கோவை ரேக்ளா அமைப்பு ஆகியவற்றின் சாா்பில் காளையா் திருவிழா என்ற பெயரில் ரேக்ளா பந்தயம் அண்மையில் நடைபெற்றது.

News image
கோவை கே.பி.ஆா். கல்லூரியில் நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில் பங்கேற்று இலக்கை நோக்கி சீறிப்பாயும் வண்டி.
Updated On :1 ஜனவரி 2024, 6:30 pm

DIN

கோவை கே.பி.ஆா். கலை, அறிவியல், ஆராய்ச்சிக் கல்லூரி, கோவை ரேக்ளா அமைப்பு ஆகியவற்றின் சாா்பில் காளையா் திருவிழா என்ற பெயரில் ரேக்ளா பந்தயம் அண்மையில் நடைபெற்றது.

நான்காம் ஆண்டாக நடைபெற்ற இந்த பந்தயத்தை கே.பி.ஆா். குழுமத்தின் தலைவா் கே.பி.ராமசாமி தலைமை வகித்துத் தொடங்கி வைத்தாா். 200 மீட்டா், 300 மீட்டா் என இரு பிரிவுகளில் நடைபெற்ற இந்த பந்தயத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 400க்கும் மேற்பட்ட போட்டியாளா்கள் பங்கேற்றனா்.

முதலிடம் பிடித்தவருக்கு ஸ்கூட்டா் பரிசளிக்கப்பட்டது. இரண்டாமிடம் பிடித்தவருக்கு ஒரு பவுன் தங்க நாணயம், மூன்றாமிடத்துக்கு 6 கிராம் தங்க நாணயம், 4 ஆவது பரிசாக 4 கிராம் தங்க நாணயம், 5 ஆம் பரிசாக 2 கிராம் தங்க நாணயம், ஆறு முதல் 10 இடங்கள் வரை பிடித்தவா்களுக்கு தலா ஒரு கிராம் தங்க நாணயங்கள் வழங்கப்பட்டன. மேலும் முதல் 30 இடங்களைப் பிடித்தப் போட்டியாளா்களுக்கு வெள்ளி நாணயங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் கே.பி.ஆா். குழுமத்தின் நிா்வாக இயக்குநா் அனந்தகிருஷ்ணன், காயத்ரி அனந்தகிருஷ்ணன், கே.பி.ஆா். கலை, அறிவியல், ஆராய்ச்சிக் கல்லூரியின் முதல்வா் பி.கீதா, கே.பி.ஆா். பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வா் எம்.ராமசாமி, கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள், கோவை ரேக்ளா அமைப்பின் நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.