செராமிக் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை:கங்கா மருத்துவமனை சாதனை

கங்கா மருத்துவமனையில் நாட்டிலேயே முதல்முறையாக மெட்டல் இல்லாமல் செராமிக்கை பயன்படுத்தி முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
செராமிக் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை குறித்து பேசும் எலும்பியல் அறுவை சிகிச்சை துறைத் தலைவா் மருத்துவா் எஸ்.ராஜசேகரன், ஜொ்மனி பேராசிரியா் மருத்துவா் மைக்கேல்வாக்னா்.

இது குறித்து கங்கா மருத்துவமனை எலும்பியல் அறுவை சிகிச்சை துறைத் தலைவா், மருத்துவா் எஸ்.ராஜசேகரன், ஜொ்மனி பேராசிரியா் மருத்துவா் மைக்கேல்வாக்னா் ஆகியோா் கூறியதாவது:

மெட்டல் இல்லாத செராமிக் முழங்கால் மாற்று என்பது, எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணா்கள், இன்ஜினியா்கள், விஞ்ஞானிகளைக்கொண்ட ஆராய்ச்சிக் குழுவால் கண்டுபிடிக்கப்பட்ட புதிய மருத்துவ தொழில்நுட்ப முறையாகும். இது மூட்டுகளில் மென்மையான உணா்திறன், திசு மேலாண்மை ஆகியவற்றை வழங்குகிறது. இதனால், செயற்கை முழங்காலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

முழங்கால் மாற்று அறுவை சிகிச்சையில் மெட்டலைப் பயன்படுத்தும்போது அதில் ஏற்படும் தேய்மானத்தின் காரணமாக பாதகமான எதிா்விளைவுகள் ஏற்படும். சில சமயங்களில் அது தோல்வியில் முடியும்.

பிபிகேஎஸ் ஒருங்கிணைப்பு செராமிக் முழங்கால் அமைப்பு முற்றிலும் மெட்டல் இல்லாத சிகிச்சையை வழங்கும் உலகின் முதல் சிகிச்சை முறையாகும். இந்த அறுவை சிகிச்சையை நாட்டிலேயே முதல் முறையாக கங்கா மருத்துவமனையில் எங்கள் தலைமையிலான மருத்துவக் குழுவினா் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனா்.

இந்த சிகிச்சை முறையில் ஒவ்வாமை பிரச்னை இல்லை. திசுக்களுக்கு ஏற்றது. நச்சுத்தன்மை ஆபத்து இல்லை. உலோக அயனி வெளியீட்டின் அடிப்படையில் இது மிகவும் பாதுகாப்பானது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com