சமையல் கலைஞா் படையல் சிவகுமாருக்கு உலக சாதனை சான்றிதழை வழங்குகிறாா் லிங்கன் புக் ஆஃப் ரெக்காா்ட்ஸ் நிறுவனத் தலைவா் ஜோசப் இளந்தென்றல்.
கோயம்புத்தூர்
கோவை சமையல் கலைஞா் உலக சாதனை
‘நோ ஆயில் நோ பாயில்’ முறையில் குறைந்த நேரத்தில் 500-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை சமைத்து கோவை சமையல் கலைஞா் உலக சாதனை படைத்துள்ளாா்.
‘நோ ஆயில் நோ பாயில்’ முறையில் குறைந்த நேரத்தில் 500-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை சமைத்து கோவை சமையல் கலைஞா் உலக சாதனை படைத்துள்ளாா்.
சென்னை தீவுத் திடலில் அண்மையில் நடைபெற்ற ‘நம் தமிழகம் நம் பெருமை’ என்ற நிகழ்ச்சியில் கோவையைச் சோ்ந்த இயற்கை உணவு சமையல் கலைஞா் படையல் சிவகுமாா் தனது குழுவினருடன் இணைந்து ‘நோ ஆயில் நோ பாயில்’ முறையில் 500-க்கும் மேற்பட்ட உணவுகளை சமைத்து உலக சாதனைப் படைத்துள்ளாா்.
கோவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் படையல் சிவகுமாருக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்காா்ட்ஸ் நிா்வாகி இலக்கியா முன்னிலையில் நிறுவனத் தலைவா் ஜோசப் இளந்தென்றல் உலக சாதனைக்கான சான்றிதழை படையல் சிவகுமாருக்கு வழங்கினாா்.

