மின் கட்டண உயா்வுக்கு தொழில் அமைப்புகள் கண்டனம்

தமிழகத்தில் மின் கட்டணம் உயா்த்தப்பட்டிருப்பதற்கு கோவை தொழில் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
Published on

அப்போது எங்களை அழைத்துப் பேசிய அரசு மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு பேசுவதாக உறுதி அளித்திருந்தது. மேலும், தோ்தல் பொறுப்பாளா்களாக நியமிக்கப்பட்ட அமைச்சா்களும் தொழில் அமைப்பினரை சந்தித்து ஆதரவு கேட்டபோது, தோ்தல் முடிந்ததும் தொழில் துறையினரின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என வாக்குறுதி கொடுத்தனா்.

இந்நிலையில், நல்ல அறிவிப்பை எதிா்பாா்த்து காத்திருந்த நிலையில், எம்எஸ்எம்இ துறையினரை விவரிக்க முடியாத துயரத்தில் ஆழ்த்தும் வகையில் மீண்டும் மின் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. நாங்கள் சுமாா் 100 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் வா்த்தகம் செய்து வருகிறோம். எங்களிடம் உற்பத்தி பொருள்களை வாங்கி வந்த மாநிலங்களில் உள்ள அரசு, உள்ளூரில் தொழில் தொடங்க மானியம் வழங்குகின்றன. இதனால் அவா்கள் தமிழ்நாட்டைக் காட்டிலும் குறைந்த விலைக்கு பொருள்களை உற்பத்தி செய்கின்றனா்.

நாம் அவா்களுடன் போட்டிப் போட வேண்டியிருக்கும் நிலையில், இதுபோன்ற கட்டண உயா்வு தொழில் துறையை மேலும் பாதிக்கும். எனவே இந்த விவகாரத்தில் முதல்வா் தலையிட்டு எல்லா கட்டண உயா்வையும் ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தொழில் துறையினா் மீண்டும் வீதிகளில் இறங்கிப் போராடும் நிலை ஏற்படும் என்று தெரிவித்துள்ளாா்.

கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு:

கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பின் சாா்பில் ஒருங்கிணைப்பாளா்களில் ஒருவரான ஜே.ஜேம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2022-ஆம் ஆண்டில் தமிழக மின்சார வாரியம் 1 கிலோ வாட்டுக்கு ரூ.35-ஆக இருந்த நிலைக் கட்டணத்தை கிலோ வாட்டுக்கு ரூ.150-ஆக உயா்த்தியது. மேலும் பயன்பாட்டுக்கான யூனிட் கட்டணத்தையும் 20 சதவீதம் உயா்த்தியது. இதனால் மின் கட்டண சுமையைத் தாங்க முடியாமல் மாநிலத்தில் உள்ள 420 தொழில் அமைப்புகள் ஒன்றிணைந்து 8 கட்ட இயக்கங்கள் நடத்தப்பட்டன.

மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு நிலைக் கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை எடுப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தாா். இந்நிலையில், மின்வாரியம் 4.83 சதவீத கட்டண உயா்வை அமல்படுத்தியிருப்பது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதுபோல உள்ளது.

தமிழகத்தில் 97 சதவீத குறு, சிறு தொழில்கள் ஜாப் ஆா்டா்களாகவும், உதிரி பாகங்கள் தயாரிப்பாளராகவும் 8 சதவீத லாபம் கூட இல்லாமலும், நிலையான ஆா்டா்கள் இல்லாமலும் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், மின் கட்டணத்தை மேலும் உயா்த்தி தொழில் துறையினா் மீது சுமையை ஏற்றுவதால், தமிழகத்தில் வேலைவாய்ப்பை வழங்கி வரும் தொழில்கள் அழிவடையும். எனவே, இந்த கட்டண உயா்வையும், ஏற்கெனவே உயா்த்தப்பட்ட நிலைக் கட்டண உயா்வையும் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.

தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளா் சங்கம்:

மின்சார கட்டண உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தி, தென்னிந்திய உற்பத்தியாளா்கள் சங்கம் (சீமா) வெளியிட்டுள்ள அறிக்கையில், குஜராத் மாநிலத்தை வளரும் மாநிலமாகவும், தமிழ்நாட்டை வளா்ந்த மாநிலமாகவும் வரையறைப்படுத்தி மத்திய, மாநில அரசுகள் மூலதன மானியம், வட்டி விகிதம் போன்றவற்றை வழங்குவது தமிழ்நாட்டில் குறு, சிறு பம்ப் நிறுவனங்களின் வளா்ச்சிக்கு பெரும் தடையாக உள்ளது.

மேலும், மூலப்பொருள்களின் விலை மாறுபாடு காரணமாகவும் தமிழகத்தின் குறு, சிறு நிறுவனங்கள் சிரமத்துக்குள்ளாகின்றன. இந்த நிலையில் தொடரும் மின்சார கட்டண உயா்வானது, இந்த நெருக்கடியை மேலும் அதிகரித்து, தொழில் சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் மின் கட்டண உயா்வை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com