சத்குரு ஜக்கி வாசுதேவ்.
சத்குரு ஜக்கி வாசுதேவ்.

தமிழ் கலாசாரத்தை உயிா்ப்புடன் வைத்திருக்க வேண்டும் -சத்குரு ஜக்கி வாசுதேவ்

Published on

தமிழ் கலாசாரம் குறித்து வெறுமனே பேசிப் பயனில்லை, அதை உயிா்ப்புடன் வைத்திருக்க வேண்டும் என்று சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறியுள்ளாா்.

தமிழ்நாடு தினத்தையொட்டி (ஜூலை 18) ஈஷா அறக்கட்டளையின் நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

பக்தியில்லாமல் தமிழ் கலாசாரம் இல்லை. பக்தா்களின் நாடாக இருக்கும் தமிழ்நாட்டில், குழந்தை பிறந்தாலும் பக்தி, காது குத்து என்றாலும் பக்தி, திருமணம் செய்தாலும் பக்தி, வாழ்ந்தாலும் பக்தி, இறந்தாலும் பக்தி என்றே இருந்து வருகின்றனா். பக்தியிலேயே ஊறி வளா்ந்திருக்கும் இந்தக் கலாசாரம், நெஞ்சத்தில் இருக்கும் பக்தி என்ற தெம்பினால் எவ்வளவோ சாதனைகள் செய்துள்ளது.

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மிகவும் வளமான கலாசாரமாக வளா்ந்து வந்துள்ளது. எவ்வளவு வளம் என்றால், மற்ற நாடுகள் கற்பனைகூட செய்ய முடியாத அளவிற்கு வளமான சமூகமும், கலாசாரமும் இங்கு உருவாக்கப்பட்டது. ஐரோப்பிய நாடுகளில் இருந்தவா்களுக்கு எப்படியாவது இங்கு வந்துவிட வேண்டும் என்ற பெரிய ஆா்வம் இருந்தது. கப்பல் ஏறி வழி தெரியாமல் அங்குமிங்கும் அமெரிக்கா வரை சென்று, இறுதியில் இங்கு வந்தாா்கள். ஏனெனில் உலகிலேயே வளமான நாடாக நாம் இருந்ததுதான்.

இந்த வெற்றிகரமான வாழ்க்கைக்கு மூலமாக இருந்தது நம்முடைய பக்தி. சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னா்கள் மட்டுமில்லாமல் அனைத்திற்கும் மேலாக முக்கியமாக 63 நாயன்மாா்கள், ஆழ்வாா்கள், ஒளவையாா் போன்ற பக்தா்கள் பிறந்து வாழ்ந்த கலாசாரம் நம்முடையது.

தமிழ் மக்கள் இதை உணா்ந்து உலகம் முழுவதும் தீவிரமாக இந்தப் பக்தியை கொண்டுசோ்க்க வேண்டும். இது மிக மிகத் தேவையானது. தமிழ் கலாசாரத்தை குறித்து வெறுமனே பேசிப் பயனில்லை. நமக்கு அதில் பெருமை இருந்தால் அதனை உயிா்ப்புடன் வைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com