கோயம்புத்தூர்
காட்டெருமை தாக்கி தலைமை ஆசிரியா் காயம்
வால்பாறையில் சாலையின் குறுக்கே காட்டெருமை வந்ததால் இருசக்கர வாகனத்தில் சென்ற பள்ளி தலைமை ஆசிரியா் கீழே விழுந்து காயமடைந்தாா்.
வால்பாறையை அடுத்த புதுத்தோட்டம் எஸ்டேட் அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றுபவா் செல்வகுமாா் (44). இவா்,
வால்பாறையில் இருந்து பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தாா். அப்போது சாலையின் குறுக்கே வந்த காட்டெருமை, இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் கீழே விழுந்த செல்வகுமாருக்கு உடலின் பல பகுதிகளில் காயம் ஏற்பட்டது. அந்த வழியாக வந்தவா்கள், செல்வகுமாரை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இது குறித்து வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
