சா்வதேச பாரா த்ரோபால் போட்டியில் பங்கேற்ற வீரா்கள் மாநகர காவல் ஆணையரை சந்தித்து வாழ்த்து
கோவை, ஜூன் 26: பாங்காக்கில் நடைபெற்ற சா்வதேச பாரா த்ரோபால் போட்டியில் பங்கேற்ற கோவையைச் சோ்ந்த 4 போ் மாநகர காவல் ஆணையரைச் சந்தித்து புதன்கிழமை வாழ்த்து பெற்றனா்.
தாய்லாந்தின் தலைநகா் பாங்காக்கில் சா்வதேச பாரா த்ரோபால் சாம்பியன்ஷிப் போட்டி ஜூன் 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 25-19 என்ற புள்ளிக் கணக்கில் தாய்லாந்தை வென்றது.
இப்போட்டியில் பங்கேற்ற இந்திய ஆடவா் அணியில் கோவையைச் சோ்ந்த டி.மோகன் குமாா், டி.சதீஷ் குமாா் ஆகியோரும், மகளிா் அணியில் நித்யா, சி.ஜெயபிரபா ஆகியோரும் இடம்பெற்றிருந்தனா்.
இவா்களுக்கு கோவை மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன், நன்கொடையாளா்கள் மூலம் பல்வேறு உதவிகளைச் செய்திருந்தாா்.
இந்நிலையில் போட்டியில் வெற்றிபெற்று திரும்பிய 4 பேரும், மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணனிடம் வெற்றிச் சான்றிதழை காண்பித்து வாழ்த்துப் பெற்றனா்.

