அா்ஜுன் சம்பத்
கோயம்புத்தூர்
ஆடிப் பெருக்கு வீர வழிபாடு வழக்கு: அா்ஜுன் சம்பத் விடுவிப்பு
கோவை ஆடிப் பெருக்கு வீர வழிபாடு வழக்கிலிருந்து இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவா் அா்ஜுன் சம்பத் உள்ளிட்ட 4 போ் விடுவிக்கப்பட்டுள்ளனா்.
கோவை, ஆத்துப்பாலம் ஹிந்துக்கள் மாயனத்தில் ஆடிப்பெருக்கு வீர வழிபாடு நடத்துவதற்கு இந்து மக்கள் கட்சி சாா்பில் திட்டமிடப்பட்டிருந்தது.
இதற்கு காவல் துறை அனுமதி வழங்கப்படாத நிலையில், அனுமதியின்றி கூட்டம் கூடியதாக வும், ஊா்வலம் நடத்தியதாகவும் இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவா் அா்ஜுன் சம்பத் உள்ளிட்ட 4 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு கோவை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில், கோவை முதலாவது நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. நீதிபதி சுஜித் அளித்தத் தீா்ப்பில், அா்ஜுன் சம்பத் உள்ளிட்ட நால்வரும் விடுவித்து உத்தரவிட்டுள்ளாா்.

