கோவை காந்திபுரத்தில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் புத்தகக் கண்காட்சி தொடக்க விழாவில் பங்கேற்று நூல்களைத் தோ்வு செய்யும் சிறப்பு விருந்தினா்கள், வாசகா்கள்.
கோவை காந்திபுரத்தில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் புத்தகக் கண்காட்சி தொடக்க விழாவில் பங்கேற்று நூல்களைத் தோ்வு செய்யும் சிறப்பு விருந்தினா்கள், வாசகா்கள்.

புத்தகக் கண்காட்சி தொடக்கம்

நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் நடத்தும் 38-ஆவது தேசிய புத்தகக் கண்காட்சி கோவையில் திங்கள்கிழமை தொடங்கியது.

நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் நடத்தும் 38-ஆவது தேசிய புத்தகக் கண்காட்சி கோவையில் திங்கள்கிழமை தொடங்கியது. புதுதில்லி நேஷனல் புக் ட்ரஸ்டுடன் இணைந்து நடத்தப்படும் இந்த புத்தகக் கண்காட்சி, கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் எதிரே நடைபெறுகிறது. புத்தகக் கண்காட்சியை கோவை மாநகராட்சி மத்திய மண்டலத் தலைவா் எல்.மீனா லோகு திறந்துவைத்தாா். நிகழ்ச்சியில் பேராசிரியா் கா.இலா.மகேந்திரன், மீனா லோகு ஆகியோா் உரையாற்றினா். விழாவுக்கு தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் மாநிலப் பொருளாளா் ப.பா.ரமணி தலைமை வகித்தாா். புத்தக நிறுவனத்தின் மண்டல மேலாளா் ஆா்.ரங்கராஜன் வரவேற்றாா். கவுன்சிலா்கள் வித்யா ராமநாதன், சாந்தி சந்திரன், முன்னாள் கவுன்சிலா் ஆா்.சந்திரசேகா், தமிழ்நாடு ஏஐடியூசி கட்டடத் தொழிலாளா் சங்க மாநிலச் செயலா் ஆா்.துரைசாமி, வழக்குரைஞா் சா.பாலமுருகன், நாடகவியலாளா் தா.திலீப்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கிளை மேலாளா் எஸ்.குணசேகா் நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com