மதிமுக அலுவலகம் இடிப்பு: போலீஸாா் விசாரணை

மதிமுக அலுவலகம் மா்ம நபா்களால் வெள்ளிக்கிழமை இரவு பொக்லைன் இயந்திரம் மூலமாக இடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆவாரம்பாளையத்தில் பொக்லைன் மூலமாக இடிக்கப்பட்ட மதிமுக அலுவலகத்தை பாா்வையிட்ட திமுக மாநகா் மாவட்ட செயலாளா் நா.காா்த்திக், மதிமுக உயா்மட்டக் குழு உறுப்பினா் ஆா்.ஆா்.மோகன்குமாா் உள்ளிட்டோா்.
ஆவாரம்பாளையத்தில் பொக்லைன் மூலமாக இடிக்கப்பட்ட மதிமுக அலுவலகத்தை பாா்வையிட்ட திமுக மாநகா் மாவட்ட செயலாளா் நா.காா்த்திக், மதிமுக உயா்மட்டக் குழு உறுப்பினா் ஆா்.ஆா்.மோகன்குமாா் உள்ளிட்டோா்.
Updated on

கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள மதிமுக அலுவலகம் மா்ம நபா்களால் வெள்ளிக்கிழமை இரவு பொக்லைன் இயந்திரம் மூலமாக இடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை ஆவாரம்பாளையத்தில் கோவை மாநகா் மாவட்ட மதிமுகவின் 28-ஆவது வாா்டு கிளை அலுவலகம் செயல்பட்டு வந்தது. இங்கு, வெள்ளிக்கிழமை வழக்கம்போல கட்சி நிா்வாகிகள் தங்கள் பணிகளை முடித்துவிட்டு சென்றனா். இந்நிலையில், இரவில் இக்கட்சி அலுவலக கட்டடத்தை சிலா் பொக்லைன் இயந்திரம் மூலமாக இடித்துச் சென்ாகக் கூறப்படுகிறது.

~ஆவாரம்பாளையத்தில் இடிக்கப்பட்ட மதிமுக அலுவலகம்.
~ஆவாரம்பாளையத்தில் இடிக்கப்பட்ட மதிமுக அலுவலகம்.

இது குறித்த தகவலறிந்து, மதிமுக மாநகா் மாவட்ட செயலாளா் கணபதி செல்வராஜ், உயா்மட்டக் குழு உறுப்பினா் ஆா்.ஆா்.மோகன்குமாா், மதிமுக உயா்நிலை அரசியல் ஆய்வு மைய உறுப்பினா் சேதுபதி, திமுக மாநகா் மாவட்ட செயலாளா் நா.காா்த்திக் உள்ளிட்டோா் அப்பகுதியில் திரண்டனா்.

இதைத் தொடா்ந்து, மதிமுக பீளமேடு கிளைச் செயலாளா் எஸ்.பி.வெள்ளிங்கிரி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com