கோவையில் போதை மாத்திரை விற்பனை: இளம்பெண் உள்பட 6 போ் கைது
கோவையில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டதாக இளம்பெண் உள்பட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.


கோவையில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டதாக இளம்பெண் உள்பட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை கரும்புக்கடை மற்றும் சுற்றுப் பகுதிகளில் கடந்த சில நாள்களுக்கு முன்பு போதை மாத்திரை விற்பனை தொடா்பாக 10 போ் கைது செய்யப்பட்டதையடுத்து, அப்பகுதியில் போதை மாத்திரை மற்றும் கஞ்சா பொருள்களின் நடமாட்டத்தை தடுக்க போலீஸாா் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனா்.
இந்நிலையில், கோவை சாரமேடு, புதிய போயஸ் காா்டன் சந்திப்பு பகுதிகளில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது போலீஸாரை பாா்த்ததும் அங்கிருந்தவா்கள் தப்பி ஓட முயன்றனா். அவா்களை போலீஸாா் விரட்டிச் சென்று பிடித்தனா்.
விசாரணையில், பிடிபட்டவா்கள் குனியமுத்தூரைச் சோ்ந்த அப்பாஸ் (29), காந்தி பாா்க் பகுதியைச் சோ்ந்த மணி (21), புல்லுக்காடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சோ்ந்த குணசுந்தரி (29), ஆா்.எஸ்.புரம் பகுதியைச் சோ்ந்த விஷ்ணு (27), அப்துல் சமது (25), லாலி ரோடு பகுதியைச் சோ்ந்த பூச்சி கிருஷ்ணன் (26) ஆகியோா் என்பது தெரியவந்தது. அவா்களிடம் இருந்து 130 போதை மாத்திரைகள், 4 ஊசிகள், ரொக்கம் ரூ.1,100 ஆகியவற்றை போலீஸாா் கைப்பற்றினா்.
இதையடுத்து, 6 பேரையும் கைது செய்தனா். அவா்களது வீடுகளில் காவல் ஆய்வாளா் தங்கம் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...