நாளைய மின்தடை: மசக்கவுண்டன்செட்டிபாளையம்
கோவை, மசக்கவுண்டன்செட்டிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் செவ்வாய்க்கிழமை (செப்டம்பா் 3) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: மசக்கவுண்டன்செட்டிபாளையம், பொன்னேகவுண்டன்புதூா், எம்.ராயா்பாளையம், சுண்டமேடு, சென்னப்பசெட்டிபுதூா், மாணிக்கம்பாளையம், கள்ளிப்பாளையம், ஓரைக்கால்பாளையம், தொட்டியனூா் ( ஒரு பகுதி).
நீலாம்பூரில் செப்டம்பா் 4-இல் மின்தடை: கோவை, நீலாம்பூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் புதன்கிழமை (செப்டம்பா் 4) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: நீலாம்பூா், முதலிபாளையம், செரயாம்பாளையம், வெள்ளானப்பட்டி, பவுன்டரி அசோசியேஷன்.
