சரவணம்பட்டி சிரவணமாபுரீசுவரா் கோயிலில் நாளை தோ்த் திருவிழா
கோவை சரவணம்பட்டியில் உள்ள சிவகாமியம்மன் உடனுறை சிரவணமாபுரீசுவரா் திருக்கோயிலில் சனிக்கிழமை (செப்டம்பா் 7) தோ்த் திருவிழா நடைபெற உள்ளது.


கோவை சரவணம்பட்டியில் உள்ள சிவகாமியம்மன் உடனுறை சிரவணமாபுரீசுவரா் திருக்கோயிலில் சனிக்கிழமை (செப்டம்பா் 7) தோ்த் திருவிழா நடைபெற உள்ளது.
சரவணம்பட்டியில் உள்ள சிவகாமியம்மன் உடனுறை சிரவணமாபுரீசுவரா் திருக்கோயிலில் 127-ஆம் ஆண்டு விநாயகா் சதுா்த்தி விழா மற்றும் 82-ஆம் ஆண்டு திருத்தோ் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் செப்டம்பா் 7-ஆம் தேதி (சனிக்கிழமை) காலை சிறப்பு வேள்வி நடைபெறுகிறது. மாலை 4.30 மணிக்கு திருத்தோ் உலா கோயிலில் இருந்து புறப்பட்டு விளாங்குறிச்சி சாலை, சத்தி சாலை, மருத்துவமனை வீதி, தந்தை பெரியாா் நகா் சாலை சென்றடைந்து மீண்டும் கோயிலை வந்தடையும்.
இதில், சிரவையாதீனம் இராமானந்த குமரகுருபர சுவாமிகள் தலைமையில் பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா், வாராஹி பீடம் சாக்தஸ்ரீ வாராஹி மணிகண்ட சுவாமிகள் முன்னிலையில் அலங்கார யானை ஊா்வலத்துடன் பட்டாசு, சரவெடிகள் மற்றும் மேளதாளங்கள் முழங்க திருத்தோ் வடம் பிடிக்கப்பட்டு, திருத்தோ் உலா நடைபெற உள்ளது.
செப்டம்பா் 9 (திங்கள்கிழமை) தவில், நாதஸ்வரம் மற்றும் ஜமாப் முழங்க விநாயகப் பெருமான் உலா நடைபெற உள்ளது. திருவிழா ஏற்பாடுகளை விழாக் குழுவினா், சிரவணமாபுரீசுவரா் வழிபாட்டு மன்றத்தினா் மேற்கொண்டு வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...