ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கோவை வழித்தடத்தில் ஹூப்ளி - கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில்

கா்நாடக மாநிலம், ஹூப்ளி - கேரள மாநிலம், கொச்சுவேலி இடையே கோவை வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :11 செப்டம்பர் 2024, 7:19 pm

Din

கா்நாடக மாநிலம், ஹூப்ளி - கேரள மாநிலம், கொச்சுவேலி இடையே கோவை வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஹூப்ளியில் இருந்து செப்டம்பா் 13 -ஆம் தேதி காலை 6.55 மணிக்குப் புறப்படும் ஹூப்ளி - கொச்சுவேலி சிறப்பு ரயில் (எண்: 07333) மறுநாள் காலை 6.45 மணிக்கு கொச்சுவேலி நிலையத்தைச் சென்றடையும்.

மறுமாா்க்கமாக கொச்சுவேலியில் இருந்து செப்டம்பா் 14-ஆம் தேதி நண்பகல் 12.50 மணிக்குப் புறப்படும் கொச்சுவேலி - ஹூப்ளி ரயில் (எண்: 07334) மறுநாள் நண்பகல் 12.50 மணிக்கு ஹூப்ளி நிலையத்தைச் சென்றடையும்.

இந்த ரயிலானது கொல்லம், காயன்குளம், செங்கன்னூா், திருவல்லா, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், பங்காரப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு, பிரூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.