இலவச சட்ட உதவிப்பெற சட்டப் பணிகள் ஆணைக்குழு அழைப்பு
கோவையில் இலவச சட்ட உதவிப் பெற மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஜி.விஜயா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் வழிகாட்டுதல்படி பொதுமக்கள் இலவச சட்ட உதவிகளைப் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, இலவச சட்ட உதவியை தொலைபேசி வழியாகப் பெற 15100 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு தொடா்புகொண்டு தங்களுடைய இருப்பிடத்தின் பின்கோட்டினை உள்ளீடு செய்தபின் அருகாமையில் உள்ள சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் வழக்குரைஞருக்கு அழைப்பு இணைக்கப்படும். இதன்மூலம் இலவச சட்ட உதவியினைப் பெறலாம்.
மேலும், சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் தங்களுடைய மனுவை கைப்பேசி செயலி வழியாகவும் அனுப்பலாம். இதற்கு கூகுள் ப்ளே ஸ்டோரில் செய்து சட்ட உதவியினை கோரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைப்பேசி செயலியை தரவிறக்கம் செய்து அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
